
சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
80.79 லட்ச ரூபாய் மற்றும் 176 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்களை செலுத்துவது இந்த கோவிலின் சிறப்பு ஆகும். இந்த நிலையில் இன்று இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் உண்டியல் திறக்கப் பட்டு அதனை எண்ணும் பணி நடைபெற்றது.
மேலும் சாத்தூர் துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்
மேலும் ஆடி கடைசி வௌ்ளி திருவிழாவில் வைக்கப்பட்ட 4 தற்காலிக உண்டியல்கள் மற்றும் 10 நிரந்தர உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
அதில் ரொக்கமாக 80 லட்சத்து 79 ஆயிரத்து 888 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம் 176 கிராமும் மற்றும் வௌ்ளி 822 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
மேலும் உண்டியல் எண்ணும் பணியின் போது இந்து அறநிலைய துறை கோயில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் டிரஸ்டி ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






