நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..

1758469 natham mariamman - 2026

நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அன்றையதினம் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, தனபூஜைகள் ஆகியவை நடந்தது. 3-ந்தேதி கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தது. 4-ந்தேதி காலை உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலையில் இருந்து பக்தர்கள் கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தன கருப்பு சாமி கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க தீர்த்தக்குடங்களை சுமந்தபடியும், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதன் பின்னர் வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. 5-ந்தேதி காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் 4, 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 7-ம் நாளான நேற்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

தொடர்ந்து கரந்தமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள், காசி, ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோவில் ஆகிய புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஆகியவை கோவில் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 11.35 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி கோவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு வந்த கருடன் கோபுரத்தை சுற்றி வானில் வட்டமிட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் அம்மனை வேண்டி வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories