திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் எங்கும் பக்தர்கள் கூட்டம்..

IMG 20221002 WA0074 - 2026

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கருட சேவையை காண உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் கருட சேவையை கண்டு களித்தனர். பக்தர்களின் வசதிக்காக நேற்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2,345 ட்ரிப் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 1,01,880 பக்தர்கள் பயணம் செய்தனர். இதேபோல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு 2,386 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 72,637 பக்தர்கள் பயணித்தனர்.

IMG 20221002 WA0072 - 2026

கருட சேவையை காண்பதற்காக பல மணி நேரமாக 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளாக இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க தேரோட்டம் நடக்கிறது. தங்கதேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. திருப்பதியில் நேற்று 81,318 பேர் தரிசனம் செய்தனர். 38,464 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories