திருநாகேஸ்வரம் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா துவக்கம்..

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது வரும் 10-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந்தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதர் கோவில் உள்ளது. ராகு சுசீல முனிவர் அளித்த சாபத்தால் மானுட பாம்பாக திரிந்து மகா சிவராத்திரி அன்று நாகநாதரை வழிபட்டு சாபம் நீங்க பெற்ற சிறப்பு பெற்ற தலம் இந்த கோவில் ஆகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விசேஷ ஆராதனைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி ஐந்துதலை நாக வாகனம், பூத வாகனம், சிம்மம், கிளி , வெள்ளி ரிஷபம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. வரும் 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 50 நாதஸ்வர வித்வான்கள் 50 தமிழ் வித்வான்கள் இணைந்து மல்லாரி இசை வாசிக்கப்படுகிறது. வீதி உலா முடிந்து பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்துவாரி நடக்கிறது.

தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும் இரண்டு தினங்களிலும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் சுமார் 2ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு தா. உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

images 42 - 2026
1801194 thirunageswaram - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories