இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ஜமைக்காவில் இன்று தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்டில் ‘டிரா’ செய்தாலே தொடரை வென்றுவிடும். 2-வது டெஸ்டிலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 98-வது டெஸ்ட். இதுவரை நடந்த 97 போட்டியில் இந்தியா 21-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.இன்றைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.



