
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக முதலில் பேட் செய்த வங்க தேச அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி, 41 வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது, துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய ரோஹித் சர்மா ஆட்டம் இழக்காமல் 123 ரன் எடுத்து, ஆட்டநாயகன் விருது பெற்றார். அவருடன் களம் இறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக ஆடி 43 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் அதிரடி ஆட்டம் காட்டி 96 ரன்கள் எடுத்தார்.
இதை அடுத்து இறுதிப் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெற்ற சுற்றில், ஏற்கெனவே பாகிஸ்தானை இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத் தக்கது. இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.



