இந்திய பேட்ஸ்மென்கள்… இதைச் செய்வார்களா?!

eng vs ind test
eng vs ind test

இந்தியா-இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட், இரண்டாவது நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா-இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில், இந்தியா விக்கட் இழப்பின்றி 43 ரன்கள் (ராகுல் 22, ரோஹித் 20) எடுத்துள்ளது. இங்கிலாந்து 290 (போப் 81, வோக்ஸ் 50, யாதவ் 3-76) ரன்கள் எடுத்தது. எனவே இந்திய அணி 56 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 191.

ஓலி போப் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இவ்வருடத்தில் முதல் டெஸ்ட் அரைசதம் அடித்து இங்கிலாந்துக்கு ஓவல் மைதானத்தில் 99 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை கொடுத்தனர், இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல், இரண்டாவது நாள் மீதமுள்ள ஓவர்களை பார்த்து நிதனமாக ஆடி பற்றாக்குறையை பாதியாக குறைத்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன் எடுத்திருந்தது. நாள் தொடக்கத்தில் ஒன்பது ரன்களுக்கு மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது, ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மொயீன் அலி ஆகியோரின் ஆட்டத்தால் அவர்களின் அணி முன்னணிக்கு வந்தது. பின்னர் 9ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த வோக்ஸ் பழைய பந்தை நன்றாக விளையாடி ரன் சேர்த்தார்.

ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் கடைசி 16 ஓவர்களை மாலை மென் பனி நேரத்தில் எதிர்கொள்ளும் பணியில் ஈடுபட்டனர் மற்றும் எப்போதாவது விளையாடும் பந்தை தவறவிட்டாலும், இருவரும் நன்றாக ஆடினர். ரோரி பர்ன்ஸை இரண்டாவது ஸ்லிப்பில் ரோஹித்தின் ஒரு கேட்சைத் தவறவிட்டார்.

முன்னதாக உமேஷ் யாதவ் நைட்வாட்ச்மேன், கிரெய்க் ஓவர்டனை தனது நான்காவது டெலிவரி மூலம், முதல் ஸ்லிப்பில் விராட் கோலிக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாக வைத்தார். பின்னர் டேவிட் மாலன் ரோஹித்துக்கு இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அச்சமயத்தில் இங்கிலாந்து 5 விக்கட் இழப்பிற்கு 62 ரன் எடுத்திருந்தது.

இந்தியாவின் மாற்ற பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துகளை பெர்ஸ்டோவும் போப்பும் அடித்து ஆடி விரைவாக எதிர் தாக்குதலைத் தொடங்கினர். தாக்கூர் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகளை போப்பிற்கு கொடுத்தார். மேலும் சிராஜ் மதிய உணவு இடைவேளைக்கு முன் 77 ரன்களை சேர்த்தனர்.

இன்று மீண்டும் பழைய கதைதான். ரோஹித், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, பந்த் ஆகிய அறுவரில் இருவர் நூறு அடிக்கவேண்டும்; பாக்கியுள்ளோர் அரை சதம் அடிக்கவேண்டும். இன்று மூன்றாவது நாள்; இன்றும் நாளையும் இந்திய அணி விளையாடி குறைந்த பட்சம் இங்கிலாந்து 400 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையை உருவாக்க வேண்டும். செய்வார்களா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories