
ஐ.பி.எல் 2021 – 01.10.2021
பஞ்சாப் vs கொல்கொத்தா
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
துபாயில் நடைபெற்ற பஞ்சாப் கொல்கொத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி கொல்கொத்தாவை மட்டையாடச் சொன்னது.
கொல்கொத்தாவின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் மூன்றாவது ஓவரில் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் (67) சிறப்பாக ஆடினர். ராகுல் திரிபாதி (34), நித்திஷ் ராணா (31) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். ராணா பதினெட்டாவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் மீதமிருந்த இரண்டு ஓவர்களில் அதிக ரன் எடுக்க முடியவில்லை.
கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. ஓரளவிற்கு கடினமான இலக்கை பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல். ராகுலும் மயாங்க் அகர்வாலும் சிறப்பாக ஆடி, ஒரு நல்ல தொடக்கத்தினைக் கொடுத்தனர்.
அகர்வால் ஒன்பதாவது ஓவரில் 40 ரன் எடுத்து அவுட்டானார். ராகுல் கடைசி ஓவர் வரை விளையாடி 67 ரன் எடுத்தார். இறுதியில், ஒரு நகைமுரணாக, ஷாருக் கான் என்ற பஞ்சாப் வீரர் 9 பந்தில் 22 ரன் அடித்து கொல்கொத்தாவைத் தோற்கடித்தார்.
இப்போது பத்து புள்ளிகளுடன் கொல்கொத்தா நாலாவது இடத்தையும், பஞ்சாப் ஐந்தாவது இடத்தையும், மும்பை ஆறாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.
அடுத்துவரும் ஆட்டங்கள் இந்த மூன்று அணிகளுல் எந்த அணீ நாலாவது இடம் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லம் என்பதைப் பார்க்கவேண்டும்.