india sa test - 2026

டெஸ்ட் போட்டி: அனேகமாக நாளை முடிந்துவிடும்!

விளையாட்டு உலகம்
india sa test - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்- மூன்றாம் நாள் ஆட்டம்
– முனைவர் கு வை. பாலசுப்பிரமணியன்-

இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸ் 223, இரண்டாவது இன்னிங்ஸ் 198 (ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 100) தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் 210, இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டு விக்கட் இழப்பிற்கு 101.

இந்திய பேட்டர்கள் மிக மோசமாக ஆடிய நாள். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனே புஜாரா அவுட்டானார். அடுத்த ஓவரில் அஜிங்க்யா ரஹானே அவுட்டானார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 58/4.

அதன் பிறகு கோலி, ரிஷப் பந்த் இருவரும் இணைந்து நன்றாக விளையாடினார்கள். 30ஆவது ஓவர் முடிவில் கோலி 77 பந்துகளில் 16 ரன்னும், ரிஷப் 29 பந்துகளில் 22 ரன்னும் அடித்திருந்தனர். உணவு இடைவேளையின்போது 43 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கட் இழப்பிற்கு130 ரன். அதில் பந்த் 51, கோலி 28. 49ஆவது ஓவரில் கோலி 193 நிமிடம் ஆடிய பின்பு, 143 பந்துகளில் 29 ரன் எடுத்து, இரண்டாவது சிலிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 152/5. அதன் பிறகு வந்த அஸ்வின் (15 பந்துகள் 7 ரன்), ஷர்துல் தாக்கூர் (13 பந்துகள் 5 ரன்), உமேஷ் யாதவ் (10 பந்துகள் ரன் எடுக்கவில்லை), முகம்மது ஷமி (10 பந்துகள், ரன் எடுக்கவில்லை), பும்ரா (5 பந்துகள், 2 ரன்) ஆகிய அனைத்து பேட்டர்களும் ரபாடா, ஜேன்சன் இருவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக அவுட்டாயினர்.

இதில் ரிஷப் பந்த் அடித்த 100 ரன் மட்டுமே பாராட்டுக்குரியது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி 29.4 ஓவர்கள் விளையாடியது. மர்க்ரம் 16, எல்கர் 30 இருவரும் ஆட்டமிழந்துவிட்டனர். பீட்டர்சன் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

இந்த டெஸ்ட் பொட்டியை தென் ஆப்பிரிக்கா வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வெற்றிக்கு அவர்கள் 111 ரன் அடிக்கவேண்டும், இன்னும் எட்டு விக்கட்டுகள் அவர்கள் கையில் உள்ளன. இன்றைக்கு அம்பயர்கள் சரியாக அவுட் கொடுக்கவில்லை என இந்திய வீரர்கள் பல சமயங்களில் நினைத்தனர்.

விராட் கோலி ஸ்டம்ப் மைக்கில் போய் தனது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். நாளை அநேகமாக மேட்ச் முடிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.