IPL 2022: ராஜஸ்தான் vs லக்னோ

Published:

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 10 ஏப்ரல் 2022 ராஜஸ்தான் vs லக்னோ
– K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் பத்தாம் நாள் ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 20ஆவது போட்டி நடந்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிறகு 165 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் எட்டு விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்து ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.

ஹெட்மையர், போல்ட், சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் ராயல்ஸ் வெற்றியை உறுதி செய்தனர். இறுதி ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸுக்குப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் 14 ரன்னை அழகாக டிஃபண்ட் செய்தார். வரிசையாக நான்கு போட்டிகளில் நான்காவது டாஸை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்றாவது முறையாக மிகவும் சிறப்பாக ஆடி, வெற்றிகரமாக தற்காத்துக்கொள்ள ஒரு வழியைக் கண்டறிந்தது.

19வது ஓவரில் ரியான் பராக் அடித்து விளையாட ராயல்ஸ் அணியின் அஷ்வின் ஐபிஎல் விளையாட்டுகளில் முதன் முறையாக “ரிடையர்டு அவுட்” என அறிவித்து வெளியில் சென்றது ஒரு புதுமை.

10ஆவது ஓவரில் ஆறாம் மட்டையாளராக அஷ்வினை ஆட அனுப்பியதும் ஆச்சரியம்தான். லக்னோ ஆடியபோது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அவர்களும் கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ஜேசன் ஹோல்டரை முன்னதாகவே மட்டையாட அனுப்பிவைத்தார்கள். முதல் இன்னிங்ஸின் முடிவில் ஷிம்ரோன் ஹெட்மயர் அவர் எதிர்கொண்ட கடைசி 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

லக்னோ அணி ஆடும்போது தொடக்கத்தில் போல்ட்டின் ஸ்விங் பந்து வீச்சில் ராகுலும் கௌதமும் ஆட்டமிழந்தனர். இருந்தபோதிலும், 165 ரன் கள் அடிக்க அந்த அணி மிகவும் சிரமப்பட்டது. இந்திய சர்வதேச வீரர் ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா, 19ஆவது ஓவரில் யார்க்கர்களை வீச முயற்சித்து 19 ரன்களை (இரண்டு ஆறு, ஒரு ஃபோர்) மார்கஸ் ஸ்டோனிஸிடம் விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் குல்தீப் சென் பந்துவீச்சில் லெங்த் அண்ட் வைட் ஆஃப் அவுட்டில் மூன்று பந்துகளை வீசினார்.

அதனால் கடைசி இரண்டு பந்துகளில் அடிக்கப்பட்ட பவுண்டரியும் சிக்ஸரும் ஒரு பொருட்டில்லாமல் போனது. ராயல்ஸ் அணி இப்போது முதலில் பேட்டிங் செய்யும் கடினமான பணிக்கு பழகிவிட்டது. இருந்தாலும் ஐந்து முதல் 15 ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி நான்கு பவுண்டரிகளை மட்டுமே அடிக்க முடிந்தது. 11 ஓவர்களில் அவர்கள் வெறும் 53 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

நான்கு விக்கெட்டுகளும் சரிந்தன. அப்போதுதான் ராயல்ஸ் அணி அஸ்வினை விளையாட அனுப்பியது. அஸ்வின் ஐபிஎல்லில் முன்பு முதல் ஆறு இடங்களில் பேட்டிங் செய்துள்ளார், ஆனால் பொதுவாக சேஸிங் சமயத்தில் ஸ்கோரை நிலைப்படுத்த குறைந்த ஸ்கோரிங் கேம்களில் அவ்வாறு பேட்டிங் செய்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இலக்கை நிர்ணயிக்கும் போது அவர் முதல் ஆறு இடங்களுக்குள் பேட்டிங் செய்வது இதுவே முதல் முறை. 16ஆவது ஓவரின் தொடக்கத்தில் 14 பந்துகளில் 9 ரன்களில் இருந்த அவர், தனது வேலை முடிந்தது என்று முடிவு செய்தார். அதனால் அவர் அடிக்கத் தொடங்கினார்.

கௌதமை அடுத்தடுத்து சிக்ஸர்களுக்கு அனுப்பினார், ஐபிஎல் இன்னிங்ஸில் ஒன்றுக்கு மேல் அடித்த அவர் சிகசர் அடிப்பது இது மூன்றாவது முறை. அவேஷ் கான் வீசிய 17ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. 18ஆவது ஓவரை இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிக்கு ஹெட்மையர் அடித்தார்.

19ஆவது ஓவரில் இரண்டு பந்துகளுக்குள், அஷ்வின் “ரிடயர்ட் அவுட்” ஆகி வெளியேற, பராக் உள்ளே நுழைந்ததைக் கண்டு ஹெட்மையர் திகைத்துப் போனார். ஆனால் அது ஹெட்மையர் அடுத்த இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு அடிப்பதைத் தடுக்கவில்லை.

இப்படியாக ராஜஸ்தான் ராயல்ஸ் தன்னுடைய 165 என்ற ஸ்கோரை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்து வெற்றியைப் பெற்றது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img