IPL 2022: ஹைதராபாத் குஜராத் அணிகளின் வெற்றி!

Published:

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – 23 ஏப்ரல் 2022 இரண்டு ஆட்டங்கள்
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஏப்ரல் இருபத்தி மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் குஜராத், கொல்கொத்தா அணிகளுக்கிடையே மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கட் மைதானத்தில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் பெங்களூரு அணிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே மும்பை ப்ரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

குஜராத் vs கொல்கொத்தா

குஜராத் டைட்டன்ஸ் அணி (156/9, ஹர்திக் 67, ரசல் 4-5, சவுத்தி 3-24) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (148/8, ரசல் 48, ரிங்கு 35, ஷமி 2-20, ரஷித் 2-22, தயாள் 2-42) 8 ரன் வித்தியாசத்தில் வென்றது.

34 ஆட்டங்களில் எந்த கேப்டனும் செய்யத் துணியாத ஒரு செயலை இன்று ஹர்திக் பாண்டியா செய்தார். டாஸ் வென்ற பின்னர் மட்டையாட முடிவு செய்தார். ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் மாறிமாறிச் சென்றது. இருந்தாலும், குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தில் வெற்றி பெற்று அவர்களுக்குத் தேவையான இரண்டு புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் மீண்டும் தனது இடத்தைப் பிடித்தது.

பத்து ஓவர் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 78 ரன் களை எடுத்திருந்தது. ஆனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 156 ரன்களை எடுத்தபோது அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகத் தோன்றியது. டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பகால நைட் ரைடர்ஸ் விக்கெட்டுகள் தேவைப்பட்டன. முகமது ஷமி, யாஷ் தயாள் மற்றும் லாக்கி பெர்குசன் 6.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர், மேலும் டைட்டன்ஸ் 25 பந்தில் ஆண்ட்ரே ரசல் 48 ரன்கள் எடுத்திருந்தாலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

நைட் ரைடர்ஸ் அணி இன்று மூன்று மாற்றங்கள் செய்திருந்தது. பாட் கம்மின்ஸுக்குப் பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டார். சவுதி இரண்டாவது ஓவரில், முதல் பந்தில் சுப்மான் கில்லை ஆட்டமிழக்கச் செய்தார். விருத்திமான் சாஹா சரளமாக விளையாட முடியாமல் திணறினார்.

ஹர்திக் டைட்டன்ஸ் அணிக்காக 3ஆவது இடத்தில் களமிறங்கினார். அவர் சஹா மற்றும் நம்பர் 4, டேவிட் மில்லர் ஆகியோருடன் 36 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஆனால் 18வது ஓவரில் அவர் வீழ்ந்தார். அடுத்த மூன்றாவது பந்தில் ரஷீத் கான் ஆட்டமிழந்தார். அவர் சென்ற ஆட்டத்தில் தடாலடியாக ஆடியவர் இன்று சோபிக்கவில்லை. இருபதாவது ஓவரில் ஆண்ட்ரூ ரசல் ஐந்து ரன் கொடுத்து நாலு விக்கட்டுகளை வீஸ்த்தினார்.

ஐபிஎல் 2022இல் நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்று நான்காவது தொடக்க ஜோடி விளையாட வந்தது. இதில் சாம் பில்லிங்ஸ் சுனில் நரைனுடன் கொல்கொத்தாவின் சேஸைத் தொடங்கினார். ஆனால் இரண்டு தொடக்க வீரர்களையும் ஷமி தனது முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் அவுட்டாக்கினார்.

ஐந்தாவது ஓவரில் நிதீஷ் ராணா ஆட்டமிழந்தார். ஏழாவது ஓவர் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 34/4. அதன் பின்னர் 12ஆவது ஓவர் வரை வெங்கடேச ஐயரும் ரிங்கு சிங்கும் பார்ட்னர்ஷிப் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் தயாள், ரிங்குவை ஆட்டமிழக்கச் செய்தார்.

நைட் ரைடர்ஸ் டக்அவுட்டிலிருந்து ரஸ்ஸலுடன் ஸ்ட்ரைக் ரோடேட் செய்து ஆடும்படி வெங்கடேஷுக்கு அறிவுறுத்தல் வந்தது. ஆனால் அவர் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில், ரஷித்கான் ஷிவம் மாவியை அவுட்டாக்கினார். நான்கு ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டைட்டன்ஸ் அணிக்கு தலா ஒரு ஓவருடன் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச இருந்தனர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

ஷமி 16ஆவது ஓவர், பெர்குசனிடம் 17ஆவது ஓவர் வீசினர்; 16 ரன்கள் கொடுத்தனர். தயாலின் 19வது பந்தில் 11 ரன்கள் சென்றது. கடைசி ஓவரில் 18 ரன் அடிக்க வேண்டும். முதல் பந்தில் சிக்சர்; இரண்டாவது பந்தில் ரசல் ஆட்டமிழந்தார். மீதமுள்ள பந்துகளில் தேவையான ரன் களை கொல்கொத்தா அணி எடுக்க முடியவில்லை. எனவே அந்த அணி தோற்றுப் போனது.

பெங்களூரு vs சன்ரைசர்ஸ்

மொத்தம் 24.1 ஓவர்களே ஆடப்பட்ட இந்த மேட்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (1 விக்கெட்டுக்கு 72, அபிஷேக் 47, வில்லியம்சன் 16*, ஹர்ஷல் 1-18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை(68 ஆல் அவுட், பிரபுதேசாய் 15, ஜான்சன் 3-26, நடராஜன் 3-10) 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தேர்வு எழுத அமர்ந்து, வினாத்தாளை ஸ்கேன் செய்து, எல்லா விடைகளும் நமக்குத் தெரியும் என்னும்போது நாம் எப்படியிருப்போம் அதுபோன்ற ஒரு நிலையில் ஆட்டம் தொடங்கும் முன்னர் பெங்களூரு அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐந்தில் நான்கு வெற்றிகளுடன் களமிறங்கியது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அவர்கள் புள்ளிப் பட்டியலில் மேலே மேலே செல்லலாம். ஆனால் அவர்கள் ஆடிய ஆட்டம் வேறு விதமாய் இருந்தது.

ஒரு ஓவர். மூன்று ரன்கள். மூன்று விக்கெட்டுகள் – புதிய பந்து பந்துவீச்சு ஒரு கலை என்றால், மார்கோ ஜான்சன், குறைந்தபட்சம் இன்றிரவு வரை, பை-ஃபிளிப்பின்-காஸோவாக இருந்தார். ட்யூ பிளேசிஸ் (5 ரன்), விராட் கோலி (ரன் எடுக்கவில்லை), அனுஜ் ராவத் (ரன் எடுக்கவில்லை) மூவரும் அணியின் இரண்டாவது ஓவரில், ஜான்சனின் முதல் ஓவரில் ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

கிளென் மேக்ஸ்வெல் இந்த ஐபிஎல்லில் எந்த நேரத்திலும் கிரீஸில் இருக்கும் போது பந்து வீச்சாளர்களைத் தாக்குவதில் மிகவும் கவனமாக இருந்தார். ஆனால் சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த அவர், ஐந்தாவது ஓவரில் வீழ்ந்தார். ஒன்பதாவது ஓவரில் பிரபுதேசாயும் (15 ரன்) தினேஷ் கார்த்திக்கும் (ரன் எடுக்கவில்லை) ஆட்டமிழந்தனர். பத்தாவது ஓவரில் ஷபாஸ் அகமது (7 ரன்), 13ஆவது ஓவரில் ஹர்ஷல் படேல் (4 ரன்), 16ஆவது ஓவரில் ஹசரங்கா (8 ரன்), 17ஆவது ஓவரில் சிராஜ் (2 ரன்) என வரிசையாக விக்கட் விழுந்தது.

எளிமையான இலக்கை அடைய சன்ரைசர்ஸ் அணி நிதானமாகத் தொடங்கியது. 2, 8, 13, 10, 9, 14, 7, 9 ரன் ஒரு விக்கட் என ஒவ்வொரு ஓவருக்கும் ரன் எடுத்து எளிதாக வெற்றிபெற்றது. புள்ளிப் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும் சன்ரைசர்ஸ் இரண்டாமிடத்திலும் உள்ளன.

Related articles

Recent articles

spot_img