T20 WC 2022: மழை தடுத்த ஆட்டங்கள்!

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினோராம் நாள் – 26.10.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று சூப்பர் 12 ஆட்டங்களில் குரூப் 1 பிரிவில் இரண்டு ஆட்டங்கள் மெல்பர்னில் நடைபெற்றன. இல்லையில்லை; நடைபெறவில்லை. அப்படியும் இல்லை ஒரு ஆட்டம் அரைகுறையாக நடந்தது; மற்றொன்று நடைபெறவில்லை. மெல்போர்ன் நகரில் பெய்த மழையால் ஆட்டங்கள் தடைபட்டன. 

முதல் ஆட்டம் அயர்லாந்து – இங்கிலாந்து

அயர்லாந்து அணி (19.2 ஓவரில் 157 ஆல் அவுட், பல்பிர்னி 62, டக்கர் 34, மார்க் வுட் 3/34, லிவிங்ஸ்டோன் 3/17) டக்வெர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணியை (14.3 ஓவரில் 5 விக்கட் இழப்பிற்கு 105 ரன்) வெற்றிகண்டது.

இந்த ஆட்டம் மழையால் பல முறை பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீசத் தீர்மானித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஓரளவிற்கு நன்றாகவே பந்து வீசினார்கள். இதனால் அயர்லாந்தின் ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இருப்பினும் பால் ஸ்டிர்லிங் (14 ரன்), பல்பர்னி (62 ரன்), டக்கர் (34 ரன்), கேம்பர் (18 ரன்), டிலானி (12 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 157 ரன் எடுத்தது.

அடுத்து விளையாட வந்த இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பட்லர் (பூஜ்யம்), ஹால்ஸ் (7 ரன்), பென் ஸ்டோக்ஸ் (6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் (37 பந்துகளில் 35 ரன்), ப்ரூக் (21 பந்துகளில் 18 ரன்), மொயின் அலி (12 பந்துகளில் 24 ரன்) ரன் ரேட்டை உயர்த்த முனைப்பு காட்டவில்லை. இன்னமும் ஆறு ஓவர்கள் இருக்கின்றது வெற்றிபெற்று விடலாம் என்று அலட்சியமாக மெதுவாக ஆடினார்கள்.

ஆனால் 14.3 ஓவரில் மழை மீண்டும் வந்துவிட்டது. அதன் பின்னர் ஆட்டத்தை தொடர முடியவில்லை. எனவே டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி ரன் கணக்கிடப் பட்டது. இங்கிலாந்து அணி ஒருவேளை 110 ரன் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். 105 ரன் கள் மட்டுமே எடுத்திருந்ததால் ஐந்து ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டம் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடப்பதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories