
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 17 – விருதுகள்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி முடிந்ததும் (1) தங்க மட்டையாளர் விருது, (2) தங்கப் பந்து விருது, (3) போட்டி நாயகன் விருது, (4) இறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது ஆகியவை அறிவிக்கப்படுகிறது. ‘தங்க மட்டையாளர் விருது’ அதிக ரன் எடுத்த வீரருக்கு வழங்கப்படுகிற்து. இது 1975ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் விருது. ‘தங்கப் பந்து விருது’ அதிக விக்கட் எடுக்கும் பந்துவீச்சாளருக்கு 1975 முதல் வழங்கப்படுகிறது. போட்டி நாயன் விருது 1992 முதல் வழங்கப்படுகிறது. போட்டி முழுவது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது 1992ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
போட்டி நாயகன் விருது பெற்றவர்கள்
1992 – நியுசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் க்ரோ – போட்டியில் மொத்தமாக 456 ரன்கள் எடுத்தார்.
1996 – இலங்கையைச் சேர்ந்த சனத் ஜெயசூர்யா – 221 ரன்கள், 6 விக்கட்டுகள்
1999 – தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லான்ஸ் க்ளுஸ்னர் – 281 ரன்கள், 17 விக்கட்டுகள்
2003 – சச்சின் டெண்டுல்கர் – 673 ரன்கள் 2 விக்கட்டுகள்
2007 – ஆஸ்திரேலியாவின் க்ளன் மெக்ராத் – 26 விக்கட்டுகள்
2011 – யுவராஜ் சிங், 362 ரன் கள், 15 விக்கட்டுகள்
2015 – ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஸ்டார்க் – 22 விக்கட்டுகள்
2019 – நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் – 578 ரன் கள், 2 விக்கட்டுகள்
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகர் விருது பெற்றவர்கள்
1975 – மேற்கு இந்தியத் தீவுகளின் க்ளைவ் லாய்ட் – 102 ரன்
1979 – மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் – ஆட்டமிழக்காமல் 138 ரன்கள்
1983 – மொஹிந்தர் அமர்நாத் – 26 ரன் மற்றும் 3 விக்கட்டுகள்
1987 – ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் – 75 ரன்
1992 – பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் – ஆட்டமிழக்காமல், 18 பந்துகளில் 33 ரன், 3 விக்கட்டுகள்
1996 – Mad Max எனச் செல்லமாக அழைக்கப்படும் இலங்கையின் அரவிந்-டி-சில்வா – ஆட்டமிழக்காமல் 107 ரன், 3 விக்கட்டுகள்
1999 – ஆஸ்திரேலியாவின் – 4 விக்கட்டுகள்
2003 – ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் – ஆட்டமிழக்காமல் 140 ரன்
2007 – ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் – 149 ரன்
2011 – மஹேந்திர சிங் தோனி – ஆட்டமிழக்காமல் 91 ரன்
2015 – நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபால்க்னர் – 3 விக்கட்டுகள்
2019 – இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் – ஆட்டமிழக்காமல் 84 ரன்
தங்க மட்டையாளர் விருது, தங்கப் பந்து விருது பெற்ற்வர்கள் யார் யார் நாளை பார்க்கலாம்