
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 18 – விருதுகள் (தொடர்ச்சி)
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தங்க மட்டையாளர் விருது, ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் எடுத்த விளையாட்டு வீரருக்குத் தரப்படும் விருதாகும். இது 1975ஆம் ஆண்டிலிருந்து தரப்படுகிறது. இந்திய அணிவீரர்கள் இந்த விருதை நான்கு முறை வாங்கியிருக்கிறார்கள்.
1975 நியூசிலாந்தின் கிளன் டர்னர் – 333 ரன்கள்
1979 மேறகு இந்தியத் தீவுகளின் கார்டன் க்ரனீட்ஜ் – 253 ரன்கள்
1983 – இங்கிலாந்தின் டேவிட் கவர் – 384 ரன்கள்
1987 – இங்கிலாந்தின் கிரஹாம் கூச் – 471 ரன்கள்
1992 – நியூசிலாந்தின் மார்ட்டின் க்ரோ – 456 ரன்கள்
1996 – சச்சின் டெண்டுல்கர் – 523 ரன்கள்
1999 – ராகுல் ட்ராவிட் – 461 ரன்கள்
2003 – சச்சின் டெண்டுல்கர் (இரண்டாவது முறை) – 673 ரன்கள்
2007 – ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் – 659 ரன்கள்
2011 – இலங்கையின் திலகரத்னே தில்ஷான் – 500 ரன்கள்
2015 – நியூசிலாந்தின் மார்டின் குப்டில் – 547 ரன்கள்
2019 – ரோஹித் ஷர்மா – 648 ரன்கள்
தங்கப் பந்து விருது
‘தங்கப் பந்து விருது’ உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கட் எடுத்த பந்துவீச்சாளருக்குத் தரப்படுகிறது. சில சமயங்களில் சமமாக அதிக விக்கட் எடுத்த இரண்டு வீரர்களுக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது.
1975 – ஆஸ்திரேலியாவின் கேரி கில்மோர் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளின் பெர்னார்ட் ஜூலியன் – தலா 11 விக்கட்டுகள்.
1979 – இங்கிலாந்தைச் சேர்ந்த மைக் ஹென்றிக்ஸ் – 10 விக்கட்டுகள்
1983 – ரோஜர் பின்னி – 18 விக்கட்டுகள்.
1987 – ஆஸ்திரேலியாவின் கிரெய்க் மெக்டெர்மாட் – 18 விக்கட்டுகள்.
1992 – பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் – 18 விக்கட்டுகள்.
1996 – அனில் கும்ப்ளே – 15 விக்கட்டுகள்.
1999 – நியூசிலாந்தின் ஜெஃப் அல்லாட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் – தலா 20 விக்கட்டுகள்.
2003 – இலங்கையின் சமிந்தா வாஸ் – 23 விக்கட்டுகள்.
2007 – ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் – 26 விக்கட்டுகள்.
2011 – ஜாகிர் கான் மற்றும் பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிதி – தலா 21 விக்கட்டுகள்.
2015 – ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் – தலா 22 விக்கட்டுகள்.
2019 – ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் – 27 விக்கட்டுகள்.
(இத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் முடிவு பெறுகிறது