Ind Vs Ban T20: தூள் கிளப்பிய பாண்ட்யா; இளம் இந்திய அணியின் வெற்றி!

ind vs ban t20 - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம் முதல் டி20- குவாலியர்- 06.10.2024

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வங்கதேச அணியை (19.5 ஓவர்களில் 127, மெஹிதிமிராஸ் 35, ஷண்டோ 27, அர்ஷதீப் சிங் 3/14, வருண் சக்ரவர்த்தி 3/31) இந்திய அணி (11.5ஓவர்களில் 132/3, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 39, சூர்யகுமார் யாதவ் 29, சஞ்சுசாம்சன் 29) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

          மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

          இந்திய அணியின் ஆடும் லெவனில், அபிஷேக் சர்மா,சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக்பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நிதிஷ் ரெட்டி மற்றும்  மயங்க் யாதவ் இருவரும் இன்று முதன் முறையாக டி20ஆட்டத்தில் ஆடுகின்றனர்.

          வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் பர்வேஸ்ஹொசைன் 8 ரன்னும், லிட்டன் தாஸ் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க சிறிது நேரம்தாக்குப் பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் 27 ரன்கள் எடுத்தார்.

          தவ்ஹித் ஹிருதாய் 12 ரன்களும், ரிசாத்ஹொசைன் 11 ரன்களும், தஸ்கின் அகமது 12 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில்மெஹிதி ஹசன் மட்டும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார்.

32பந்துகளை எதிர்கொண்ட அவர் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.

          இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி,அர்ஷ்தீப்சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜேக்கர் அலியை ஆட்டமிழக்கச்செய்த வருணின் பந்து ஒரு அற்புதமான பந்து. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

          இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக்சர்மா 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 15 ரன் எடுத்த அவர் கடைசி பந்தில் ஒரு துரதிர்ஷ்டவசமானரன் அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5.3ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடிக்க நினைத்துஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே முறையில் சிக்சர் அடிக்க நினைத்துசஞ்சு சாம்சனும் 29 ரன்னுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ரன்கள் குவித்தஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க,11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories