IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs பெங்களூரு – லக்னோ – 23.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (231/6, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 94, அபிஷேக் ஷர்மா 34, அனிகேத் வர்மா 26, ஹென்றி கிளாசன் 24, ட்ராவிஸ் ஹெட் 17 ஷெப்பர்ட் 2/14, புவனேஷ் குமார், லுங்கி நிகிடி, சுயேஷ் ஷர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (19.5 ஓவர்களில் 189, பில் சால்ட் 62, விராட் கோலி 43, ஜிதேஷ் ஷர்மா 24, ரஜத் படிதர் 18, மாயங்க் அகர்வால் 11, கம்மின்ஸ் 3/28, ஈசன் மலிங்கா 2/37, உனத்கட், ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கட்) 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (10 பந்துகளில் 17 ரன், 3 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் (48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) கடைசி வரை ஆடி அணிக்கு வலு சேர்த்தார்.

பின்னர் வந்த வீரர்களான ஹென்றி கிளாசன் (24 ரன்), அனிகேத் வர்மா (26 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (4 ரன்), அபினவ் மனோகர் (12 ரன்), மற்றும் பாட் கம்மின்ஸ் (13 ரன்) இஷான் கிஷன் உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 231 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தனர்.

232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள்.

பில் சால்ட் (32 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), விராட் கோலி (25 பந்துகளில் 43 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மயாங்க் அகர்வால் (10 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்), ரஜத் படிதர் (16 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர்), ஜிதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. அந்த சமயத்தில் அவர்களின் இரண்டு பேட்ஸ்மென்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அடுத்த 26 பந்துகளில் 7 விக்கட்டுகளை எடுத்து, சன்ரைசர்ஸ் அணி அவர்களது வெற்றியைப் பறித்தனர். இறுதியில் பெங்களூரு அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 189 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

சன்ரைசர்ஸ் அணியின் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது என்பது இன்னமும் முடிவாகவில்லை. அந்த வகையில் ஆட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories