இங்கிலாந்தில் இந்தியா ஏ, மேற்கிந்திய தீவுகள் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ்
அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடந்த வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ – மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகிளையும் இழந்தது. இதை தொடர்ந்து 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய ஏ அணி, 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



