இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சுதந்திர தின வாழ்த்து செய்தியை ட்விட்டரில் நேற்று பதிவிட்டார். அதில், ‘‘வறுமை, ஏழ்மை, பாகுபாடு, பாலின வேறுபாடு, தாக்குதல், பொறாமையிலிருந்து விடுதலை பெற இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க பலரும் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தை பெருமைபடுத்துவோம். ஜெய்ஹிந்த்!’’ என கூறி உள்ளார்.
இதற்கு பதில் ட்வீட் போட்ட ரசிகர் ஒருவர், ‘‘சுதந்திர தினம் முடிந்து விட்டது மேடம். பிரபலமான நீங்களே இவ்வாறு செய்வது தவறான முன்னுதாரணம்’’ என சர்ச்சையை கிளப்ப பார்த்தார். அதற்கு மிதாலி ராஜ், ‘‘சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்பதால் அங்கு செல்போன் பயன்படுத்த முடியாது. இதுபோதுமான காரணமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என பதிலளிக்க ரசிகர்கள் பலரும் பதில் வாழ்த்து கூறி உள்ளனர்.




