இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி செப்டம்பர் 2-ம்தேதி முதல் 5-ம் தேதி வரையும், 2-வது போட்டி செப்டம்பர் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையும் நடக்கிறது.
இந்த ஆட்டங்கள் விசாகப்பட்டனத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளதால் இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
முதல் ஆட்டம் பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்திலும், 2-வது ஆட்டம் ஆளுரிலும் நடைபெறும் என பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.




