இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசந்த், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து. கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பானை வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஸ்ரீசந்த்திற்கு பிசிசிஐ வாழ்நாள் தடைவிதித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
ஸ்ரீசந்த் தனது மனுவில், நான் கடந்த ஐந்தாண்டுகளாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறேன். இதுவே போதுமான தண்டனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.




