அமெரிக்க ஓபன் காலிறுதிக்குள் நுழைந்தார் ரபெல் நடால்

விளையாட்டு

01 Sep01 Rafael Nadal - 2026

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ்
பாசிலாஷ்விலியும் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.

இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன் மோதுகிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.