பெட்ரோல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகின்றன. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையாகிறது.
பெட்ரோல் (லிட்டருக்கு):
- புதிய விலை – ரூ. 82.24
- பழைய விலை – ரூ.81.92
- வித்தியாசம் – 32 காசுகள்
டீசல் (லிட்டருக்கு):
- புதிய விலை – ரூ.75.19
- பழைய விலை – ரூ.74.77
- வித்தியாசம் – 42 காசுகள்




