திறன் மிக்க வீரர்களைக் கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததால் கேப்டன் விராட் கோலி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கோலிக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். செடீஸ்வர் புஜாரா, ராகுல், ரஹானே ஆகியோரின் பேட்டிங் திறன் மற்றவர்களைக் காட்டிலும் 10 மடங்கு சிறப்பாக உள்ளதாகவும், அவர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்த உதவ வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.
வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்துப் பேசினாலே வெற்றி தானாக கிட்டும் எனவும் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.




