ஆசிய கோப்பை -2018 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் மோதுகின்றன.
போட்டியை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 6 அணிகளும் ஏ மற்றும் பி என 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு ஏ-யில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், பிரிவு பி-யில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் “ சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூப்பர் 4-ல் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக மோதும்.
இன்றைய தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.
போட்டி அட்டவணை
(அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகின்றன. )
1. வங்க தேசம் vs இலங்கை / குரூப் பி / சனி / செப்டம்பர் 15
2. பாகிஸ்தான் vs ஹாங்காங் / குரூப் ஏ/ ஞாயிறு/ செப்டம்பர் 16
3. இலங்கை vs ஆப்கானிஸ்தான் / குரூப் பி/ திங்கள் / செப்டம்பர் 17
4. இந்தியா vs ஹாங்காங் / குரூப் ஏ / செவ்வாய் / செப்டம்பர் 18
5. இந்தியா vs பாகிஸ்தான் / குரூப் ஏ / புதன் / செப்டம்பர் 19
6. வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் / குரூப் பி / வியாழன் / செப்டம்பர் 20
7. சூப்பர் 4, மேட்ச் 1/ வெள்ளி / செப்டம்பர் 21
8. சூப்பர் 4, மேட்ச் 2 / வெள்ளி / செப்டம்பர் 21
9. சூப்பர் 4, மேட்ச் 3 / ஞாயிறு / செப்டம்பர் 23
10. சூப்பர் 4, மேட்ச் 4 / ஞாயிறு / செப்டம்பர் 23
11. சூப்பர் 4 மேட்ச் 5 / செவ்வாய் / செப்டம்பர் 25
12. சூப்பர் 4 மேட்ச் 6 / புதன் / செப்டம்பர் 26
13. ஃபைனல் மேட்ச் / வெள்ளி / செப்டம்பர் 28
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் 2 மாதங்களாக கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலிக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது. இதனால் ஆசிய கோப்பை போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.




