வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் விராட் கோலி 27 ஆட்டங்களில் விளையாடி 1387 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களது வரிசையில் டோனி இணைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 101 ரன் தேவை. டோனி 33 போட்டியில் விளையாடி 899 ரன் எடுத்து உள்ளார்.
5 ஒருநாள் போட்டியில் 101 ரன்களை எடுப்பதன் மூலம் அவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1000 ரன்னை கடப்பார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.




