டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
முதல் செட்டை 21-15 என எளிதாக வென்ற சாய்னா, 2வது செட்டையும் 21-17 என கைப்பற்றி நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.




