அமெரிக்க கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், பெராரி அணி வீரர் கிமி ரெய்கோனன் சாம்பியன் பட்டம் வென்றார்.ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடத்தையும், மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் 3வது இடத்தையும் பிடித்து முறையே 18 மற்றும் 15 புள்ளிகளை பெற்றனர். இதுவரை நடந்துள்ள 18 பந்தயங்களின் முடிவில் ஹாமில்டன் 346 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இன்னும் 3 பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில், உலக சாம்பியன் பட்டம் வெல்ல ஹாமில்டன் – வெட்டல் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Popular Categories




