அசார் அலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு

விளையாட்டு

01 Nov02 Asaar ali - 2026

பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன் அசார் அலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2011ல் அறிமுகமான இவர், 53 ஒருநாள் போட்டியில் 1,845 ரன் எடுத்துள்ளார்.

இவரிடம் இன்னொரு ஆச்சரியம் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியதேயில்லை. சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவை வீழ்த்திய இறுதிப் போட்டியில் அசார் அலி முக்கியமான 59 ரன்களை எடுத்தார். இதே சாம்பியன்ஸ் ட்ராபி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ரன்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 76 ரன்களையும் எடுத்தார் அசார் அலி.

இந்த ஆண்டு நியூஸிலாந்து தொடருக்குப் பிறகே அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டு இவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டார்.

“நான் திடீரெனத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டிகளுக்கு அபாரமான வீரர்கள் ஆடி வருகின்றனர், ஆகவே என் தேவை இருக்காது.

ஆனால் நான் எந்த ஒரு கசப்பான எண்ணங்களுடனும் ஓய்வு அறிவிக்கவில்லை. இது என் சொந்த முடிவு, டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அடுத்த உலகக்கோப்பை மற்றும் வரவிருக்கும் தொடர்களுக்காக பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஒரு முன்னாள் கேப்டனாக வாழ்த்துகிறேன். சர்பராஸ் அகமட் அணியை நன்றாகவே வழிநடத்துகிறார்.” என்றார்.

இதுவரை 53 போட்டிகள் ஆடிய அசார் அலி, 1845 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 36.90. இதில் 3 சதங்கள் 12 அரைசதங்கள் அடங்கும்.

இவரது கேப்டன்சியில் பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக 3-0 என்று உதை வாங்கியது, அதன் பிறகே ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் 9-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.