இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி, பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராத் கோஹ்லி களமிறங்குவது இந்திய அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களில் வெற்றியை வசப்படுத்தி உள்ள இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் உள்ளது. 2017 ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் தோற்ற இந்திய அணி, அதன் பிறகு விளையாடிய அனைத்து தொடர்களிலும் வென்றுள்ளதால் வீரர்களின் தன்னம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
Popular Categories




