தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுபகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



