December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

Tag: தேவர் ஜெயந்தி

தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்த ஸ்டாலின்! ட்ரெண்ட் ஆன #GoBackStalin

#GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆவதால் தமிழக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில்

தேவரின் 112 வது ஜெயந்தி!முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் நடத்தப்படும். அதே போல், இந்த ஆண்டும் கொண்டாடவிருப்பதாக அதிமுக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ' தேவர் திருமகனாரின் 112 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வரும் புதன் கிழமை (30.10.2019) காலை 9 மணி அளவில் ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவனார் நினைவிடத்தில் நடைபெற உள்ளது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகளும் அமைச்சர் பெருமக்களும் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனால், அதிமுக கட்சியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.