தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்த ஸ்டாலின்! ட்ரெண்ட் ஆன #GoBackStalin

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
stalin-in-pasumpon
stalin-in-pasumpon

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்காக பசும்பொன் வந்த திமுக தலைவர்  ஸ்டாலின் அங்கே தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறுகிறது.

stalin-garlanding-devar-statue
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

இதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் அவருடன்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அனைத்துக் கட்சியினரும் தேவர் குருபூஜைக்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர் 

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இருப்பினும், மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது 

#GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆவதால் தமிழக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.