பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்… #GobackStalin திருக்குறள் படித்து திருந்துங்க ஸ்டாலின்!

Published:

twittertrend
twittertrend

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். என்பதுபோல சொந்த மாநிலத்திலேயே #GobackStalin அகில இந்திய அளவில் #Trending ஆகிக்கொண்டிருக்கிறது.

இதுதான் கர்மா! – என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச். ராஜா 

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறுகிறது இதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த திமுக தலைவர் மு க  ஸ்டாலின் இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தொடர்ந்து அவர் பசும்பொன் கிராமத்திற்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார் அவரது மதுரை மற்றும் பசும்பொன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GobackStalin   என்ற  ஹேஷ்டேக் டிவிட்டரில் பிரபலமானது. அகில இந்திய அளவில் பிரபலமடைந்தது #GobackStalin 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

முன்னர் பிரதமர் மோடி சென்னை வந்தபோது  கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக் மூலம் திமுகவினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பாக இந்த பிரச்சாரத்துக்கு உதவியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து அதிகம் பேர் கோபேக்மொடி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து இருந்தனர் என்பது தெரியவந்தது இதனால் பாகிஸ்தானுக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு குறித்து அப்போதே பலரும் விவாதித்து வந்தார்கள் 

இந்த நிலையில் இன்று அதற்கு பதிலடியாக கோபேக் ஸ்டாலின் என்ற ட்விட்டர் பதிவு தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது இதனை குறிப்பிட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா இது கர்மா என்று குறிப்பிட்டுள்ளார்

Related articles

Recent articles

spot_img