இன்று முதல் பப்ஜி கட்..! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!

Published:

pubg-banned1
pubg-banned1

செப்.2ஆம் தேதி இந்திய அரசு 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மத்திய அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்கள், சில நாட்களுக்குள் பெரும்பாலான செயலிகள் ப்ளே ஸ்டோரிலிருந்து எடுக்கப் பட்டன. 

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

இந்தியாவில் இளைஞர்கள் பலரை தன் வசம் சுண்டி இழுத்து அடிமைப்படுத்தி வைத்திருந்த பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு பிரபலமாக இருந்தது ஆனால் பப்ஜி விளையாட்டின் வன்முறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் இதை நீக்குவதாக அறிவித்திருந்தது மத்திய அரசு.

அதிக பயனர்களைக் கொண்ட பப்ஜி செயலியை இந்தியாவில் தக்க வைக்க, தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன், சீன நிறுவனம் டென்சென்ட்டுடன் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் விடுவித்துக் கொண்டு, தாமே முழு பொறுப்பையும் ஏற்பதாகவும் அறிவித்திருந்தது.

pubg-banned
pubg-banned

எனினும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டால் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்தன. நாட்டின் இளைய தலைமுறை இவ்வாறு மொபைல் ஆப் விளையாட்டின் மீதே கவனம் கொண்டு எதிர்காலத்தைத் தொலைப்பது மிகவும் அபாயகரமானது என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர் 

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

பப்ஜி விளையாட்டு: மனமுடைந்த கல்லூரி மாணவன் தற்கொலை!

மீண்டும் ஒரு உயிரை குடித்த பப்ஜி! 16 வயது சிறுவன் பரிதாப மரணம்!

அதிர்ச்சி பப்ஜி கேம் மோகம்! தாத்தாவின் ஓய்வூதிய பணத்தில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்த சிறுவன்!

இந்நிலையில் பப்ஜி விளையாட்டின் விபரீதங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பப்ஜி விளையாட்டையும் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது 

மீண்டும் அதிரடி! பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு தடை!

இந்நிலையில் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே தரவிறக்கம் செய்தவர்களுக்கு பப்ஜி பயன்பாட்டில் இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த விளையாட்டை 50 மில்லியனுக்கு அதிமானோர் விளையாடி வந்தனர். ஆனால் தற்போது ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் அக்டோபர் 30 முதல் இயங்காது என நிரந்தர தடை விதித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து பப்ஜி நிறுவனம் கூறுகையில், ”சீன நிறுவனமான டென்சென்டுடனான எங்கள் உறவை முடித்துக் கொள்வதன் மூலம் இந்தியாவில் இந்த விளையாட்டை தடையின்றி தொடர விரும்பினோம். பயனர்களின் தரவுக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியம். 

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம். ஆனால் எங்கள் தனியுரிமைக் கொள்கைப்படி அனைத்துப் பயனர்களின் தகவல்களும் வெளிப்படையானது. இந்தியாவின் இந்த முடிவுக்காக  மிகவும் வருந்துகிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்  நன்றி” என்று தெரிவித்துள்ளது. 

பப்ஜி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img