
பப்ஜி விளையாட்டுக்கு தடை செய்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம். அனந்தபுரம் நகர் வருவாய் காலனியை சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மனைவி இமஜா ராணி. இவர்களது மகன் கிரண்குமார்.
இவர் சென்னை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் திறக்காததால் கடந்த 6 மாதங்களாக கிரண்குமார் வீட்டில் இருந்தார். அப்போது, ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அடிமையானாராம்.
இந்நிலையில், ‘பப்ஜி’ விளையாட்டு உட்பட சீனாவின் செல்போன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், பப்ஜி விளையாட முடியாமல் கிரண்குமார் தவித்தார். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். போலீசில் நரசிம்மா புகார் அளித்தனர்.
நேற்று நரசிம்மாவின் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் துர்நாற்றம் வீசியது. அதன் அறைக்கதவை உடைத்து பார்த்தபோது கிரண்குமார் பேனில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‘
பப்ஜி’ விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர் கல்லூரியில் படிப்பவர் தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கட்சிகள், மத்திய அரசு பப்ஜியை தடை செய்தது தவறு இதனால் அந்த மாணவன் மன உளைச்சலில் இறந்துவிட்டான் என இதற்கு ஒரு அரசியல் செய்வார்களோ எனவும் கட்சிநிதி கொடுத்து இத்தகைய தற்கொலைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
அறியாமையை நீக்கி மன உறுதியற்று சிறுபிள்ளை தனமாக இன்றைய இளைஞர்கள் நடந்து கொள்வது வேதனையளிப்பதாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.