
அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த கார் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த 4 பேரை ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரிக்கையில் அவர்கள் 7 பேரும் திருநள்ளாறு கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.
அப்போது ஓட்டுநர் ஆனந்தகுமார் வரும் வழியில் தூக்க கலக்கத்தில் காரை எதிரே உள்ள மணல் லாரியில் மீது மோதியதாக தெரிகிறது இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.