
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ளது ஒசரவிளை என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் சகிதா. 45 வயதாகிறது. கணவரை இழந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள்தான் ஷர்மிளா 26 வயதாகிறது. குவைத் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்க்கிறார். இங்கிருந்து குவைத் செல்வதற்கு முன்பு ஷர்மிளா மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார். பல இடங்களுக்கு இருவரும் சுற்றி திரிந்துள்ளனர் ஃபேஸ்புக் காதல் இது!
இருவரும் கல்யாணம் செய்ய பிளான் இருந்த நேரத்தில்தான், கடந்த வருடம் ஜுன் மாதம் குவைத் நாட்டில் வேலை கிடைக்கவும் ஷர்மிளா சென்றுவிட்டார். இதையடுத்து, ஷர்மிளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி தனேஷ் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி பணம் தராவிட்டால், தனிமையில்போது எடுத்து கொண்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி உள்ளதாக ஷர்மிளாவின் தாயார் சகிதா அச்சு கிராமம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் தனேஷை கைது செய்துள்ளனர். அப்போது அளித்த வாக்குமூலத்தில், “நானும் ஷர்மிளாவும் நெருங்கி பழகினோம். எங்கள் விவகாரம் ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும். அவள் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன்.. இப்போது ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள். அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போவதாகவும் கேள்விப்பட்டேன்.
அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, போட்டோக்களை மார்ப் செய்து ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன். என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன். அதை ஷர்மிளா காதில் வாங்கவே இல்லை அதனால்தான் அந்த போட்டோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன். இப்போது என் மீது புகார் அளித்துள்ளனர்” என்றார். அஞ்சுகிராமம் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளன