மருத்துவமனை 2 வது மாடியிலிருந்து குதித்து பெண் நோயாளி தற்கொலை!

கிரைம் நியூஸ் தமிழகம்
suside

நாமக்கலில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துறையூரை சேர்ந்த கோகிலா(34) என்ற பெண் சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் திடீரென தனியார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட மருத்துவர்கள், மருத்துவமனையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பெண் எதற்காக தற்கொலை செய்தார்? அவர் தற்கொலைக்கு யார் காரணம்? அல்லது நாள்பட்ட புற்றுநோய் வியாதியால் தற்கொலை செய்துக்கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.