April 30, 2025, 10:55 PM
30.5 C
Chennai

இரவோடு இரவாக மகளைக் கொன்று எரித்த தாய்! ஆணவக் கொலை என காதலன் புகார்!

savithri

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவேக். 20 வயதாகிறது. இவர் ஒரு பெயிண்ட்டர். திருவரங்குளம் பகுதியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை காதலித்தார். சாவித்திரி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் திருவரங்குளம் அரசுப்பள்ளியில் பத்தாம் கிளாஸ் வரை ஒன்றாக படித்தவர்கள். 8 வருஷமாகவே உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இப்போது 20 வயதாகிறது. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.

puthukkottai

அதனால் அவரது அம்மா மகளை கண்டித்துள்ளார். மேலும் அவசர அவசரமாக சாவித்திரிக்கு அறந்தாங்கியை சேர்ந்த ஒருவருடன் கல்யாணமும் பேசி முடித்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, விவேக்கிடம் அழுதுள்ளார். தன்னை எங்காவது அழைத்து சென்றுவிடும்படியும், ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளம்படியும் கதறி உள்ளார்.

இதனால் விவேக்கும் சாவித்திரியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு ஒரு வாடகை காரையும் ஏற்பாடு செய்தார். பின்னர் கடந்த 7ஆம் தேதி இரவு 2 பேரும் அந்த காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால், வழியில் குளித்தலையில் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது விவேக்கிற்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்று சொல்லி, சாவித்திரியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்தனர்.

savithri

மேலும் விவேக்கிற்கு திருமண வயது எட்டும் வரை, வேறொருவரை திருமணம் செய்ய சாவித்திரியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவாதத்தினை பெற்றோரிடம் போலீசார் வாங்கி கொண்டு அனுப்பினர்.

ALSO READ:  பாலியல் வன்முறையில், மூன்றரை வயது சிறுமியின் பக்கம் தவறாம்: சர்ச்சை கிளப்பிய ஆட்சியர் மாற்றம்!

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சாவித்திரி பிணமாக கிடந்தார். அவரது மர்ம மரணத்துக்கு காரணமும் தெரியவில்லை. மேலும் சொந்தக்காரர்களுக்கும் தெரியப்படுத்தாமல், இரவோடு இரவாக சாவித்திரியின் உடலை ஒருசில உறவினர்களே சேர்ந்து எரித்து இறுதி சடங்குகளையும் முடித்து விட்டனர்.

இதை பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு தூக்கு போட்டு இறந்து விட்டார் என்று உறவினர்கள் சொல்லி உள்ளனர். ஆனால், இந்த விஷயம் தெரிந்து ஆவேசமடைந்த விவேக், காதலியை ஆணவ கொலை செய்து விட்டதாக புதுக்கோட்டை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார். அதனடிப்படையில் விசாரணை ஆரம்பமானது.

savithri

இதனிடையே சாவித்திரியின் சடலத்தை வருவாய்த் துறையினருக்குகூட தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் விஏஓ இளையராஜா மற்றொரு புகார் தந்தார். இதன்பேரில்தான் சாவித்ரியின் பெற்றோரிடம் விசாரணை ஆரம்பமானது. பின்னர், சாவித்திரியின் தாயார் சாந்தி, பெரியம்மா விஜயா, மாமா முருகேசன், பெரியப்பா நடேசன், முருகேசன், தாய்மாமா சிதம்பரம் என 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ:  கோயிலை மீட்க போராடவும் பக்தர்களுக்கு உரிமை இல்லை! ஒடுக்குமுறையின் உச்சம்!

காதலியை ஆணவ கொலை செய்யப்பட்டதாக காதலர் புகார் அளித்த நிலையில், பெண்ணின் தாய் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் மாதர் சங்கமும் தலையிட்டுள்ளது. எப்படியாவது இறந்துபோன பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா: அலகு குத்தி தீச்சட்டி எடுத்து வழிபாடு!

செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை யாதவா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செயதிருந்தனா்.

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

Entertainment News

Popular Categories