
தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு
இன்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அதன் தலைவர் திரிலோக சந்திரன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மாணவர் நலம், ஆசிரியர் நலம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்
இது குறித்து அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக பணி புரியும் இடத்திலேயே பதவி உயர்வு அளித்தல், இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு முரண்பாடுகள் களைந்து அரசாணை வெளியிடுதல், இருபது ஆண்டுகள் பணி முடித்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதியக்கட்டு நீட்டிப்பு செய்து அரசாணை வழங்குதல், சிறுபான்மையற்ற பள்ளிகளில் 2012 ஆண்டில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் விலக்களித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுதல்,உயர்கல்வி தேர்ச்சிக்கு ஊக்க ஊதிய உயர்வு இதுவரை பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்க அரசாணை வேண்டுதல் உயர்கல்வி பயிலுதல் முன் அனுமதி சிறப்பு நிகழ்வு பின்னேற்பு வழங்குதல் ,எம்.பில் சார்ந்த கோவை மண்டல தணிக்கை தடை நிவர்த்தி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறினோம்
ஒவ்வொரு கோரிக்கையாக பரிசீலனை செய்த அமைச்சர் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரையில் தீர்வு காணுவதாக உறுதி அளித்தார். அவரிடம் தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கினோம்… என்றார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் தேசிய ஆசிரியர் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனு…


