
உரத்த சிந்தனை கடந்த ஒரு மாத காலமாக இணைய வழியில் நடத்திய பாரதி உலா வின் நிறைவுவிழா 10-01-2021 அன்று மைலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கலை அரங்கில் செல்வி.வசுதா, செல்வி. சாரதா அவர்களுடைய பாரதி பாடல்களுடன் இனிதே தொடங்கியது.
பாரதி சிந்தனை பேச்சரங்கத்தில் செல்வன். டெக்ஸின் ரொமேரியோ, செல்வி.ஸ்ரீலேகா செல்வன். ஜெகன், செல்வி. லோகஸ்ரீ ஆகியோர் பாரதியின் கருத்துக்களையொட்டி அருமையாகப் பேசிச் சிறப்பித்தனர். உரத்த சிந்தனையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி.பத்மினி பட்டாபிராமன்
வரவேற்புரை வழங்கினார். ஆடிட்டர் ஜெ. பாலசுப்பிரமணியன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
பாரதி உலா 2020 செயல்பாடுகளை உதயம் ராம் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திரு.இல.கணேசன் மனிதன் உலகத்தில் படைக்கப்பட்டதே பிறர்க்கு உதவுவதற்குத் தான் என்று சிறப்புரை ஆற்றினார்!
பாரதி உலா 2020 சிறப்பிதழை கலைமகள் மாத இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்டார். முனைவர் திரு.மேகநாதன், டெக்னோ திரு.முரளி ஸ்ரீநிவாசன், உரத்த சிந்தனை தலைவர் எஸ்.வி.ராஜசேகர் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இணையவழியில் பாரதிக்கு பெருமை சேர்த்த வானவில் பண்பாட்டு மையத்தின் அமைப்பாளர் கலைமாமணி.திருமதி. ஷோபனா ரமேஷ், சேவாலயா நிறுவனர் திரு. முரளீதரன், தில்லி கலை இலக்கிய பேரவை செயலாளர் திரு.குமார் ஆகியோருக்கு அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளின் செயல்பாடுகளைப் போற்றி விருது வழங்கப்பட்டது.

திரைப்பட நடிகர் திரு. டில்லி கணேஷ், திரைப்பட இயக்குனர்
பாரதி உலா அனுபவங்களையும் திரு. ராசி அழகப்பன் பாரதியின் கருத்துக்களை மக்களிடம் பரப்பவேண்டும் என்றும் கூறிச் சிறப்புரை வழங்கினர்.
சிறப்புப் பேச்சாளர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பாரதியாரின் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொள்வதோடு பாரதியின் வாழ்க்கையில் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அருமையாக எடுத்துரைத்தார் திரு. தொலைப்பேசி மீரான் நன்றியுரை கூறினார்.
- G சுப்பிரமணியன்