ஆட்டையாம்பட்டி, பெத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன், 28; கட்டட தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா, 20. இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
மது அருந்தும் பழக்க முடைய கணவர், மனைவியின் அறிவுறுத்தலால், ஓராண்டாக குடிக்காமல் இருந்தார். ஒரு மாதமாக, மீண்டும் குடித்து வந்ததால், மனமுடைந்த கவுசல்யா, கடந்த, 7ஆம் தேதி, குருணை மருந்தை குடித்தார்.
நேற்று முன்தினம் காலை, நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காமல், வாயில் நுரை இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சேலம் ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.