காதல் தோல்வி விரக்தியில் 18 வயது இளைஞன் தற்கொலை!

கிரைம் நியூஸ் தமிழகம்
thukku1 1

காதல் தோல்வியால் மனமுடைந்த ஒர்க் ஷாப் ஊழியர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி அரியாங்குப்பம், சண்முகா நகர் புருஷோத்தமன் வீதியை சேர்ந்தவர் ஞானமணி,40, இவரது கணவர் கண்ணப்பன் பிரிந்து சென்றுவிட்டார்.

இவரது மகன் சுதாகர், 18 டூ வீலர் ஒர்க் ஷாப் ஊழியர். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இது தோல்வியில் முடிந்ததால், விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது அறையை சோதனையிட்டபோது, தற்கொலைக்கு முன் சுகாதகர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ‘என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல’ என எழுதி இருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.