7 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கூட்டிப் போய்.. வலி தாளாமல் கதறிய பிஞ்சு!

கிரைம் நியூஸ் தமிழகம்
vankodumai

தொப்பூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியை சார்ந்தவன் முருகன்.

முருகன் சம்பவத்தன்று சிறுமியிடம் பெற்றோர்கள் அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளான். விபரீதத்தை புரியாத சிறுமி, ஒரே பகுதியை சார்ந்தவர் என்பதால் நம்பி சென்றுள்ளார். பின்னர் சிறுமியை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற கொடூரன் முருகன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சிறுமியின் கொலுசை கால்களில் இருந்து கழற்றி எறிந்துவிட்டு, பெற்றோர்களிடம் திருட்டு தொடர்பு போல சித்தரிக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளான். காமுகனின் கொடூரத்தால் உடல்வலி தாங்க இயலாத சிறுமி, பெற்றோர்களிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அங்குள்ள தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, காமுகன் முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.