திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் தமிழகம்
vankodumai 1

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அகரம் கிராமத்தை சார்ந்தவர் கோபால் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 2 மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், கோபால் தனியாக வசித்து வந்துள்ளார். கோபால் அவ்வப்போது தனது தங்கை ஊரான செய்யூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.

அந்த சமயத்தில், அங்குள்ள பவுஞ்சூர் கிராமத்தை சார்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை தன் ஆசைக்கு இணங்க வைக்க எண்ணிய கோபால், சிறுமியிடம் திருமண ஆசையை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சிறுமியின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விஷயத்தை கேட்ட பின்னர் இந்த கொடூரம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.