Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeதமிழகம்ஜூனியர் சாம்பியன்கள்! மணிப்பூர் மீராபாய் சானுவை ஈர்த்த தமிழ்க் குழந்தை!

ஜூனியர் சாம்பியன்கள்! மணிப்பூர் மீராபாய் சானுவை ஈர்த்த தமிழ்க் குழந்தை!

- Advertisement -
- Advertisement -

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் சுமந்து, ஒட்டு மொத்த நாட்டின் மரியாதையையும் பாராட்டையும் சுமந்திருக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, இப்போது தன் மனத்தில் சுமந்திருப்பது ஒரு தமிழ்ச் சிறுமியை!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாடு திரும்பிய மீராபாய் சானு, வருங்காலத்தில் பல்வேறு ஜூனியர் பளுதூக்கும் வீராங்கனைகளை உருவாக்குவார் என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது இந்தச் செய்தி. தமிழகத்தில் இளைய சமுதாயம், வளரும் தலைமுறை சினிமா மோகத்திலும் டிவி நிகழ்ச்சிகளிலும் அடிமைப் பட்டு சோம்பிக் கிடக்கிறது என்ற கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில், ஓர் இளம் தளிர் மீராபாய் சானுவைப் போல் பளு தூக்கி, நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இது டிவிட்டர் பதிவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

வெயிட்லிஃப்டர் சதீஷ் சிவலிங்கம் ( sathish sivalingam weightlifter @imsathisholy ) தம் டிவிட்டர் பக்கத்தில் தமிழ்ச் சிறுமி பளுதூக்கும் வீடியோவைப் பதிவு செய்திருக்கிறார். டிவி திரையில் மீராபாய் சானு பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற செய்தியைப் பார்த்து உத்வேகம் பெற்று, தாமும் அதுபோல் பளுதூக்கி, மகிழ்ச்சிப் புன்னகை பூக்க, வென்ற களிப்பைக் காட்டும் விதத்தில் கை அசைத்து, ஆரவாரிக்கும் அந்த வீடியோவைப் பகிர்ந்த சதீஷ் சிவலிங்கம், இதுதான் ஈர்ப்பு என்பது, ஜூனியர் மீராபாய் சானு… என்று குறிப்பிட்டு, மீராபாய் சானுவை டிவிட்டரில் டேக் செய்திருந்தார். அதனை பகிர்ந்துள்ள மீராபாய் சானு, மிக அழகு. இதை நான் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசத்துக்காக பாரம் சுமக்கும் எத்தனையோ பேரில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவின் வீர வழித் தோன்றல்கள் தமிழகத்தில் பூத்திருப்பது மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

- Advertisement -