ஆண்டாள் அவதார தினம்! உள்ளே நடத்த தேரோட்டம்!

sriviliputhur therottam
sriviliputhur therottam

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தங்கத் தேரோட்டம் புதன்கிழமை காலை 6.05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைப்பெற்றது.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டும் அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தங்கத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டைப் போல இந்தாண்டும் கோயில் வளாகத்திலேயே தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

அதன்படி, இந்தாண்டுக்குரிய தேரோட்டம் நிகழ்ச்சிகள் கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள் ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

கோயில் வளாகத்திலேயே பல்வேறு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத் தேரோட்டம் ஆண்டாள் பிறந்த பூரம் நட்சத்திர தினமான இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதற்காக கோயிலில் இருந்து அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்கள் முழங்க தங்கத் தேருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் தங்கத்தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

பின்னர் 6:20 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் பிரிதிவிராஜ், நகராட்சி ஆணையர் மல்லிகா, டிஎஸ்பி நமச்சிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், தேரோட்டி பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட சேர்மன் வசந்தி மான்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories