images 7 2 - 2026

நாளை முதல் தஞ்சாவூர்-திருச்சி-தஞ்சாவூர் தினசரி ரயில்..

தமிழகம்

நேற்று முதல் மீண்டும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை ரயில் இயக்கப்பட்டநிலையில் நாளை முதல் தஞ்சாவூர்-திருச்சி-தஞ்சாவூர் தினசரி ரயில் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. 

மேலும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை எழும்பூர்-மதுரை (வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும். 

காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் 

எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். என அதில் கூறப்பட்டுள்ளது.

images 7 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.