தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு ..

images 2022 10 17T164620.255 - 2026

தமிழகத்தில் இரு மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் இது தமிழக நுகர்வோர் பால் துறையில் வெறும் 16 சதவீதத்தையே பூர்த்தி செய்தது. மீதமுள்ள 84 சதவீதத்தை தனியார் பால் விற்பனையாளர்களே பூர்த்தி செய்து வருகிறார்கள்.

பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப் படுவதால் தனியார் பால் விலையும் உயர்த்தப் படுகிறது. சமீப காலமாக கால்நடை தீவனப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஹெரிடேஜ், ஜெர்சி, ஆரோக்கியா ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த ஆண்டு இதுவரை 3 தடவை பால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று 4-வது முறையாக 3 தனியார் நிறுவனங்களும் பால் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளன. இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன. ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை தலா ரூ.6 மற்றும் ரூ.4 என்ற விகிதத்தில் உயர்த்தி இருக்கின்றன. ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ஜெர்சி பால் லிட்டருக்கு ரூ.59ல் இருந்து ரூ.62-ஆக உயர்ந்துள்ளது. ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை ரூ.70 மற்றும் ரூ.72-ஆக உள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ள போதிலும் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை.

அதற்கு பதில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்களின் பால் விலைக்கும், ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும் தற்போது லிட்டருக்கு 22 ரூபாய் வித்தியாசம் உள்ளது. என்றாலும் தேவை காரணமாக தனியார் பால் விற்பனை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories