மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் இன்று தொடங்கியது..

images 42 2 - 2026

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்புகளுடன் ஆதார் நம்பரையும் சேர்த்து இணைத்தால்தான், மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற அறிவிப்பு வெளியானது.

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் கட்டும் நுகர்வோர்களுக்கு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் மின் கட்டணம் கட்ட முடியாமல் தவித்தனர்.

ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழக மின் வாரியம் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்ததோடு, தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தவும் உத்தரவிட்டது. இண்டர் நெட் மையங்களில், ஆதார் நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது. பொதுமக்கள், அங்கு சென்று இணைக்க தொடங்கினார்கள்.

அதேபோன்று, வெப்சைட்கள் மூலமாகவும் நம்பரை இணைத்து விட முடிகிறது. ஆதார் எண்ணை இணைத்தவுடன், அந்தந்த போன்களுக்கு மெசேஜ் வந்துவிடும். நம்பரை இணைப்பது எளிது என்றாலும், பல பேரால் அந்த பணியை எளிதாக செய்ய முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்தது. இந்த சிறப்பு முகாம் அனைத்தும் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கியது. டிசம்பர் 31ம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அதுவரை மின் பயனீட்டாளர்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைபடியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று தொடங்கியுள்ள சிறப்பு முகாம்கள், தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்று காலை தொடங்கிய சிறப்பு முகாம்களில்,  பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்து வருகின்றனர்.  மின் இணைப்புடன், ஆதார் எண்ணை  இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை  என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories